• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வரிடம் மனு

August 21, 2019 தண்டோரா குழு

கோவை வந்த முதல்வரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சார்பாக,கொங்கு மண்டலத்தின் நீராதரமான நொய்யல் ஆற்றை தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, கழிவுநீரை கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.

இன்று கோவை விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு ஒன்றை முதல்வரிடம் அளித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சு.பழனிசாமி தலைமையில் வழங்கப்பட்ட அம்மனுவில், 147கி.மீ., தொலைவில் பயணிக்கும் நொய்யல் ஆறு குடியிருப்புகள், விவசாயி நிலத்தில் செல்வதை மறு சீரமைப்பு செய்யவும், நொய்யல் ஆற்று ஆக்கிரமிப்பை அகற்றிடவும், நகர, ஊராட்சி கழிவுநீர்கள், சாயப்பட்டறை, தொழிற்சாலை கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். நொய்யல் ஆறு புனரமைப்புக்கு தமிழக அரசு தனி அலுவலரை நியமிக்க வேண்டும். பால் கொள்முதல் விலை உயர்வு திருப்தி அளிக்கவில்லை என்றாலும், விவசாயிகளின் துயரத்தை குறைத்து உள்ளது. என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் படிக்க