• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இனிமேல் பிக்பாஸ் பக்கம் தலை வைத்துக்கூட படுக்க மாட்டேன் – மதுமிதா

August 20, 2019 தண்டோரா குழு

பிரபல தனியார் தொலைகாட்சியில் கமல் தொகுத்து வழங்கி வரும் நிகழச்சி பிக் பாஸ்.100 நாட்கள் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கடந்த வாரம் நடந்த டாஸ்க் ஒன்றில் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாக நடிகை மதுமிதா வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நடிகை மதுமிதா தனியார் இணையதளம் ஒன்றுக்கு பிக்பாஸ் வீட்டில் நடந்தது குறித்து மனம் திறந்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறுகையில்,

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிலேயே எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்ததால் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. 3-வது முறை வாய்ப்பு வந்த போது இந்தமுறை வாய்ப்பை இழக்க வேண்டாம் என்று நினைத்து உள்ளே சென்றேன். எனக்கு முதன்முதலாக பிக்பாஸ் வீட்டில் பிரச்னை ஏற்பட்டது ஷெரினுடன் தான். தமிழ் ரசிகர்களுக்காக தான் நிக்ழ்ச்சி நடக்கிறது. ஆனால் பிக்பாஸ் வீட்டில் அபிராமி, ஷெரீன் ஆகிய யாருமே தமிழ் பேசவில்லை. உடைகளும் நமது கலாச்சாரத்துக்கு ஏற்ற மாதிரி அணியவில்லை. இதைதான் நான் கேட்டேன். ஆனால் அதை எனக்கே திரும்பிவிட்டனர். ஒரு சகோதரியாக கவினுக்கு புத்தி சொன்னேன் ஆனால் அதையும் அவர் கேட்கவே இல்லை. எனது உயரத்தை வைத்து குள்ளச்சி என்று பெயர் வைத்தது கவின் தான். எனக்கு அது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒரே நியாயமான மனிதர் சேரன் மட்டும் தான். லாஸ்லியாவை அவர் மகளாக நினைக்கிறார். ஆனால் கவினுடன் லாஸ்லியா சேர்ந்த பிறகு மாறிவிட்டார்.

கடந்த வியாழன் அன்று நடந்த ஹலோ ஆப் டாஸ்க்கில் வருண பகவான் கூட கர்நாடகாக்காரர் தான் போல. நமக்கு மழையே கொடுப்பதில்லை என்று எனது கருத்தைக் கூறினேன். உடனே இதற்கு நடிகை ஷெரீன் எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடகாவைச் சேர்ந்த நான் இங்கு இருக்கும்போது நீ எப்படி இவ்வாறு கூறலாம் என்று கூறி கத்தினார். ஹலோ ஆப்-ல் என்னுடைய கருத்தை நான் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது என்று கூறினேன். ஆனால் அதை ஒப்புக்கொள்ளவில்லை. எப்போது பார்த்தாலும் நீ என்ன தமிழ்ப் பெண் என்று பேசுகிறாய். தமிழக மக்களுக்காக உயிரை கொடுக்க முடியுமா என்று கேட்டனர். அதனால் தான் நான் எனது கையை அறுத்துக் கொண்டு எனது வாதத்தை நிரூபித்தேன். நான் கையை அறுத்துக் கொண்ட போது எனக்கு சேரனும், கஸ்தூரியும் மட்டுமே ஆதரவாக இருந்தனர். மற்றவர்கள் யாரும் என்னிடம் வரவில்லை. இனிமேல் பிக்பாஸ் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க மாட்டேன்” என்று மதுமிதா கூறியுள்ளார்.

மேலும் படிக்க