• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும் – ஜெ.தீபா

August 19, 2019 தண்டோரா குழு

அதிமுகவுடன் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை இணைந்து செயல்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலித்தாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். தீபாவின் அமைப்புக்கு பெரிதாக வரவேற்பு இல்லததால், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இதற்கிடையில் சில வாரங்களுக்கு முன்னர் தான் இயக்கத்தை கலைப்பதாகவும், அரசியலில் இருந்து விலகுவதாகவும் தீபா தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்திருந்தார்.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு இன்று வந்த தீபா பேரவையின் தலைமை நிலைய செயலாளர் தொண்டன் சுப்ரமணி கூறுகையில், “எங்கள் பொது செயலாளர் தீபாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இங்கு வரவில்லை அதிமுகவில் இணைய விரும்பி கடிதம் வழங்கி உள்ளோம். தலைமைக் கழகம் எங்களை என்று அழைக்கிறதோ அன்று நாங்கள் அனைவரும் எந்த நிபந்தனையின்றி இணைய உள்ளோம் எனக்கூறினார். இந்நிலையில், இன்று மாலை ஜெ தீபா மற்றும் அவரது கணவர் மாதவன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஜெ தீபா,

தனக்குப் பின்னர் அதிமுக நிலைக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் எண்ணத்தை நிறைவேற்ற எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை முன்னாள் நிர்வாகிகள், தாய் கழகமான அதிமுகவில் இணையுமாறு கேட்டுக்கொள்கிறேன். உடல்நிலை காரணமாக அரசியலைவிட்டு விலகுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டேன், அதிமுகவுடன் இணைந்து செயல்படவும் முடிவெடுக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், அலை கடலென தொண்டர்கள் திரண்டு வந்தனர், பல சோதனைகளை தாண்டி இயக்கத்தை நடத்தி வந்தேன். அதிமுகவில் எந்த பொறுப்பையும், பதவியையும் எதிர்பார்க்கவில்லை. போயஸ் இல்லத்தை மீட்பதில், சட்டரீதியிலான நடவடிக்கை தொடரும் தீபா கூறினார்.

மேலும் படிக்க