• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் அத்திவரதரை கொச்சைப்படுத்தும் வகையில் வாசகம் வெளியிட்டவர்கள் மீது புகார்

August 14, 2019 தண்டோரா குழு

அத்திவரதரையும், இந்து மத நம்பிக்கையும் கொச்சைப்படுத்தும் வகையில் வாசகம் வெளியிட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு இந்து திருக்கோவில் கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் வைத்துள்ள அறிவிப்பு பலகையில் புத்தி வருமா என்ற தலைப்பில் அத்திவரதர் பார்க்கப் போய் அவரு பணக்கார சாமி ஆகிவிட்டார் அவரைப் பார்க்கப் போன எத்தனை பேரு பணக்காரர் ஆகி இருக்கிறார்கள் என்று எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அத்திவரதர் சுவாமியையும் இந்து மதத்தையும் புண்படுத்தும் வகையில் இதுபோன்ற வாசகத்தை வெளியிட்டிருப்பதாக தமிழ்நாடு இந்து திருக்கோயில் கூட்டமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.இவ்விவகாரம் குறித்து கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்த இக்கூட்டமைப்பினர் பல கோடி பக்தர்களின் மனது புண்படும் விதமாக இது போன்ற வாசகங்களை அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற பின்னர் எழுதி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர் மேலும், இந்து மத துவேசம் செய்துவரும் இவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் படியும்அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க