• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

August 14, 2019 தண்டோரா குழு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில், வ.உ.சி., மைதானத்தில், சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இம்மைதானம், மாநகர போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு,. மேடை அமைக்கும் பணி தற்போது துவக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

இதேபோல், மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகமாக கூடுமிடங்கள், பஸ் ஸ்டாண்டுகள், வழிபாட்டு தலங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.கோவை ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் ‘மெட்டல் டிடெக்டர்’ அமைக்கப்பட்டு பயணிகளும், உடமைகளும் சோதனை செய்யப்படுகின்றன. ரயில்வே தண்டவாளங்களில், வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் ரயில்வே போலீசார் ரோந்து பணி மேற்கொள்கின்றனர். கோவை சர்வதேச விமான நிலையத்திலும் மூன்றடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு, 24 மணி நேர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க