• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ இதுவரை உண்மை குற்றவாளிகளை கண்டறியவில்லை – பொள்ளாச்சி எம்பி

August 13, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சி.பி.ஐ இதுவரை உண்மை குற்றவாளிகளை கண்டறியபில்லை எனவும், பாதிக்கபப்ட்ட 200க்கும் மேற்பட்ட பெண்களை தனி அறையில் வைத்து சிபிஐ விசாரிக்க வேண்டுமென பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் வலியுறுத்தி உள்ளார்.

மழையால் கோவை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் கூட்டாக கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி. பி.ஆர்.நடராஜன்,

சித்திரைச்சாவடி அணையில் இருந்து பேரூர் பகுதியில் உள்ள செங்குளத்திற்கு நீர் வருவதை வேண்டும் என்றே ஆளும் கட்சியினர் மணல் போட்டு தடுத்துள்ளது. மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாமல் நடப்பதற்கு வாய்ப்பில்லை.மழை காரணமாக ஆத்துப்பாலத்தில் 20 வீடுகள் சேதமடைந்துள்ளது. அவர்களுக்கு உரிய இழப்பீட்டை , போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும். குடிசை மாற்று வாரியம் சார்பாக வழங்கப்படும். குடியிருப்புகள் நகரப்பகுதியிலே வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்தார். தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கான உதவித்தொகை உடனடியாக வழங்க வேண்டும் என கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம்,

கோவையில் 25 ஏக்கர் நிலம் கொடுத்தால் 100 கோடி செலவில் உள்கட்டமைப்பு உட்பட அனைத்து வசதிகளுடன் கூடிய வர்த்தக மையம் அமைப்பது தொடர்பாக , டெல்லியில் உள்ள எம்.எஸ்.எம்.இ யின் செயலரை சந்தித்து பேச இருப்பதாக கூறினார். பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை உடனடிகாக கண்டறிய வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு திமுக கொடுத்த நிர்பந்தத்தின் காரணமாகவே சி.பி.ஐக்கு வழக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார். இதுவரை உண்மை குற்றவாளிகளை சி.பி.ஐ கண்டறியவில்லை என குற்றம்சாட்சினார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட 200 பெண்களை சி.பி.ஐ அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

வால்பாறை நகரப்பகுதி ஏழு கார்ப்பரேட் நிறுவனங்களின் கீழ் இயங்கி வருவதாகவும், அங்குள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்காலின் வாழ்வாதராம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து டாடா குழும தலைவரிடம் பேச அனுமதி கேட்டிருப்பதாக தெரிவித்தார். மலைவாழ் மக்களுக்காக பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1000 வீடுகள் கட்ட மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க