• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கேட்க வேண்டும் – முன்னாள் காவல்துறை சங்கத்தினர்

August 13, 2019 தண்டோரா குழு

காவல் ஆய்வாளரை தர குறைவாக பேசிய மாவட்ட ஆட்சியர் மன்னிப்பு கோரவில்லை எனில் மறியல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் முன்னாள் காவல்துறை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் காவல்துறை சங்கம் மற்றும் முன்னாள் காவல்துறை அறக்கட்டளை சார்பில் கோவை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய அச்சங்கத்தின் தலைவரான ஓய்வுப்பெற்ற டி.எஸ்.பி. வெள்ளியங்கிரி,

காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் பாதுகாப்பு பணியிலிருந்த ரமேஷ் என்கிற காவல் ஆய்வாளரை,காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா பொதுமக்கள் 100க்கனக்கானோர் முன்னிலையில் தரக்குறைவாக மனிதாபிமற்ற முறையில் பேசி ஈடுபட்ட செயல் காவலருக்கு ஏற்பட்ட அவமானம் மட்டுமின்றி காவல்துறை தொடர்பாக மக்களிடையே அவமானம் ஏற்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ரமேஷ் விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கேட்க வேண்டும். சாதாரண மனிதரை கூட பேச முடியாத வார்த்தைகளை சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் இதுபோன்ற பேசுவது அனைவரையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது. மாவட்ட ஆட்சியர் நடந்து கொண்ட விதம் ஆய்வாளர் குடும்பத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் காவல்துறையை சார்ந்தவர்கள் கொதிப்படைந்து உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தங்களது வருத்தத்தையும்,கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

மேலும், சட்ட ரீதியாக பொது நல வழக்கு தொடர உள்ளதாகவும் முதல்வர், டி.ஜி.பி மற்றும் முதன்மை செயலாளர்,உயர் நீதிமன்ற நீதிபதிக்கு மனுவாக அளிக்க உள்ளதாக தெரிவித்தார். வி.ஐ.பி. பாஸ் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டாலும் ஒருவரை அனுமதிக்கும் உரிமை சட்டப்பூர்வமாகவே அங்கு பணியில் ஆய்வாளருக்கு தான் உண்டு என்றார். இவ்வாறு சூழ்நிலைகேற்ப முடிவு எடுக்கும் காவல்துறை அதிகாரிகளை இப்படி தரக்குறைவாக நடத்தியது கண்டனத்திற்குரியது என்றவர் இவ்வாறான செயல்களால் பாதிக்கபடுபவர்கள் காவல்துறையில் பணிபுரிபவர்கள் பாவம் பட்ட ஜென்மங்கள் என்றார்.

மேலும் படிக்க