• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நாட்டின் முன்னேற்றத்தில் மேலாண்மை துறை பெரும் பங்கு வகிக்கிறது – கிருஷ்ணராஜ வானவராயர்

August 10, 2019

நமது நாட்டின் பொருளாதார சவால்களில் மேலாண்மை துறை சார்ந்த இளைய தலைமுறையினர் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என பாரதீய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ வானவராயர் தெரிவித்துள்ளார்.

கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள எஸ்.வி.கே.கல்வி குழுமங்களின் FIRE BIRD மேலாண்மை கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது. எஸ்.வி.கே.கல்வி குழமங்களின் தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினராக பாரதீய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ வானவராயர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

அப்போது பேசிய அவர்,

நமது நாட்டில் தற்போது வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குறிப்பாக பொருளாதார சவால்களில் மேலாண்மை துறை சார்ந்த இளைய தலைமுறையினர் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் முன்னேற்றத்தில் மேலாண்மை துறை பெரும் பங்கு வகிக்க போவதாக தெரிவித்தார். விழாவில் கல்லூரி உறுப்பினர்கள் சுந்தர்ராமன்,அழகப்பன்,ஆறுமுகம்,லீலாவதி கந்தசாமி,சுஜானா அபிராமி சுந்தர்ராமன் மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க