• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்கடம் குளத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் பாதிக்கப்படும் என தண்ணீரை ஆற்றில் திறந்துவிட முயற்சி

August 10, 2019

கோவை உக்கடம் குளத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் பாதிக்கப்படும் என தண்ணீரை ஆற்றில் திறந்துவிட முயற்சி – பொதிமக்களின் முற்றுகையால் கைவிடப்பட்டது.

கோவையில் கடந்த 5 நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில், நொய்யல் ஆற்றில் அதிகளவில் வெள்ளம் வந்துகொண்டுள்ளது. இந்த வெள்ளத்தை கொண்டு குளங்களை நிரப்பும் பணியை விட்டு விட்டு, தண்ணீரை சேமிக்காமல், அதிமுக அரசு ஆற்றில் விட்டு வருகின்றது. இதற்கு உதாரணமாக, கோவை உக்கடம் பெரிய குளத்தில், தற்போது ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தண்ணீர் இருந்தால் பணிகள் பாதிக்கும் என, தண்ணீரை நொய்யல் ஆற்றில் வெளியேற்றும் நடவடிக்கையில் குளக்கரையை பின்புறம் வெட்டி வெள்ளத்தை நொய்யல் ஆற்றில் வெள்ளியேற்ற அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதையறிந்த பொதுமக்கள் தடுத்ததால், தண்ணீரை வெளியேற்றும் பணியை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். குளக்கரைகளை மேம்படுத்தும்போது, குளங்களின் அளவை குறைக்க கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், நீதிமன்றத்தையும் மீறி குளக்கரையை ஸ்மாட் சிட்டி திட்டம் மூலம் கரையோர பகுதிகளை மூடி வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க