• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

66வது தேசிய விருது அறிவிப்பு – முழு விபரம்

August 9, 2019

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. வருடா வருடம் இந்த விருது அறிவிப்பு ஏப்ரல் மாதம் நடைபெற்று மே மாதம் 3ஆம் தேதி விருதுகள் வழங்கப்படும். ஆனால், இந்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றதால் இது தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று 2018ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.சிறந்த நடிகையாக கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டார். ”மகாநதி (நடிகையர் திலகம்)” படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் பெற்றுள்ளார். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் வெளியான இப்படத்தில் சாவித்திரியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் படமாக பாரம் தேர்வானது.

66வது தேசிய விருது அறிவிப்பு – முழு விபரம்

சிறந்த படம்: ஹேலாரா(குஜராத்)

சிறந்த நடிகர்கள்: ஆயுஸ்மான் குரானா(அந்தாதூன்), விக்கி கவுசல்(உரி)

சிறந்த நடிகை: கீர்த்தி சுரேஷ் (மகாநடி, தெலுங்கு)

சிறந்த இயக்குநர்: ஆதித்யா தார் (படம்: உரி)

சிறந்த அறிமுக இயக்குநர்: சுதாகர் ரெட்டி

சிறந்த துணை நடிகர்: சாவந்த் கிர்கிரி (படம்: சம்பக் – மராத்தி)

சிறந்த துணை நடிகை: சுரேகா சிக்ரி (படம்: பதாய் ஹோ – ஹிந்தி)

சிறந்த இசையமைப்பாளர்: சஞ்சய் லீலா பன்சாலி(பத்மாவத்)

சிறந்த பின்னணி பாடகர் – அர்ஜித் சிங்(பத்மாவத்)

சிறந்த பின்னணி பாடகி: பிந்து மாலினி (நதிசராமி – கன்னடம்)

சிறந்த பின்னணி இசை: சாஸ்வத் சஜ்தேவ்(உரி)

சிறந்த பொழுதுப்போக்கு படம்: பதாய் ஹோ

சிறந்த குழந்தை நட்சத்திரம்: பிவி ரோகித்(கன்னடம்), சமீப் சிங்(பஞ்சாபி), தல்ஹா அர்ஷத் ரெஷி(உருது), ஸ்ரீனிவாஸ் போகலே(மராத்தி)

சிறந்த படத்தொகுப்பு: நாகேந்திர கே.உஜ்ஜைனி (நதிசராமி – கன்னடம்)

சிறந்த ஆடை அலங்காரம்: இந்திராக்ஷி, கவுரங் ஷா மற்றும் அர்ச்சனா ராவ் (மகாநடி – தெலுங்கு)

சிறந்த மேக்கப்: ரஞ்சித் (அவே – தெலுங்கு)

சிறந்த பாடலாசிரியர்: மஞ்சுநாதா (பாடல்: மாயாவி மனாவே… – படம் நதிசராமி – கன்னடம்)

சிறந்த திரைக்கதை: ராகுல் ரவிந்திரன் (தெலுங்கு)

சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் : அவே(தெலுங்கு) – கேஜிஎப்(கன்னடம்)

சிறந்த ஒளிப்பதிவு: எம்ஜே.ராதா கிருஷ்ணன் (ஒலு – மலையாளம்)

சிறந்த தமிழ் படம்: பாரம்

சிறந்த தெலுங்கு படம்: மகாநடி

சிறந்த கன்னடம் படம்: நதிசராமி

சிறந்த மலையாள படம்: சூடானி பிரம் நைஜீரியா

சிறந்த ஹிந்தி படம்: அந்தாதூன்

மேலும் படிக்க