• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ரயில் நிலைய பார்சல் அலுவலக மேற்கூரை சுவர் இடிந்து விபத்து – 2 பேர் உயிரிழப்பு

August 8, 2019

கோவை ரயில் நிலைய பார்சல் அலுவலக மேற்கூரை சுவர் இடிந்து விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

கோவை ரயில் நிலையத்தின் பின்புறம் கூட்ஸ் ரோட்டில் ரயில்வே பார்சல் அலுவலகம் உள்ளது. இருசக்கர வாகனம் பார்சல் செய்யும் இடம் மற்றும் பொருட்கள் வைக்கும் இடம் ஆகியவை இந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. ரயில்வேக்கு சொந்தமான இந்த அலுவலக கட்டிடம் இன்று காலை 3.30 மணி அளவில் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக திடீரென இடிந்து விழுந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இந்த இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை ரயில்வே போலீசாரும், தீயணைப்பு துறையினரும் மீட்டனர். மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பாலசுப்பிரமணியம் தலைமையில் 5 தீயணைப்பு வாகனங்களில் 50 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

இதில் இடிபாடுகளில் சிக்கிய ஓப்பந்த பணியாளர்கள் பவிழமணி, இப்ராகிம் மற்றும் வடமாநில தொழிலாளி ராஜூ ஆகிய மூன்று பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து தீயணைப்பு துறையினர்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக இந்த விபத்து நடைபெற்று உள்ளதாக மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பாலசுப்ரமணியம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணியினை தீயணைப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட இப்ராஹிம் மற்றும் பவிழம்மணி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். படுகாயமடைந்த வடமாநில தொழிலாளி ராஜூ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க