August 6, 2019
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கனத்த மழை பெய்து வருவதால் கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நீர் வரத்து குறைந்த பின்னரே கோவை குற்றாலாம் திறக்கக்கபடும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென் மேற்கு பருவ மழை கடந்த ஜூலை மாதம் முதல் வாரத்தில் துவங்க வேண்டிய நிலையில் கேரளாவிலேயே கடந்த ஜுலை மாதம் 18 ஆம் தேதி தான் துவங்கியது. அப்போது ஓரிரு நாள் மட்டுமே கோவையிலும், கோவையை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மழையில் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து சிறுவாணி நீர்பிடிப்பு பகுதி மற்றும் பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. அதனால் நொய்யல் ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சித்திரை சாவடி தடுப்பணையில் வெள் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதே போல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள கோவை குற்றாலம் அருவியில் நீர் ஆர்பெடுத்து ஓடுகிறது. அதே போல் பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக உள்ளதால், 10 ஆயிரம் கன அடி நீர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றபடுவதால் பவானி ஆற்றங்கரையோரும் இருக்கும் மக்கள் பாதுக்காப்பான இடங்களுக்கு செல்லுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளாக கோவை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை இல்லாமல் இருந்த நிலையில், நேற்று இரவு முதல் கோவை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் பொது மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் மீட்பு குழு ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.