• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இன்று காஷ்மீருக்கு நடந்தது நாளை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் நடக்கலாம்- ப.சிதம்பரம்

August 5, 2019 தண்டோரா குழு

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370, 35A-வை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ், திமுக உட்பட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:-

மிகப்பெரிய தவறை இந்த அவை இன்று செய்துள்ளது; எதிர்கால சந்ததியினருக்காக, நான் உங்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன். “ 370-ல் திருத்தம் கொண்டு வரலாமே தவிர, ரத்து செய்வது முறையாக இருக்காது. இந்திய வரலாற்றில் இது ஒரு துக்க தினம். மாநிலத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை. மக்களின் உரிமையை காக்க வேண்டியது அரசின் மிகப்பெரிய கடமை.வெற்றி பெற்றதாக நினைக்க வேண்டாம். இது ஒரு வரலாற்றுப் பிழை. 370வது பிரிவு ரத்து மூலம் கல்லறை கட்டிவிட்டதை வருங்கால சமுதாயம் உணரும்.

மிகப்பெரிய தவறை இந்த அவை இன்று செய்துள்ளது. எதிர்கால சந்ததியினருக்காக, நான் உங்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன். இன்று காஷ்மீருக்கு நடந்தது நாளை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் நடக்கலாம். ஜம்மு-காஷ்மீரை போல நாளை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களும் பிரிக்கப்படலாம். சிறப்பு அந்தஸ்தை நீக்கியது பயனற்றது. மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. மாநில உரிமைகள் பறிப்பின் உச்சக்கட்டமாக காஷ்மீர் விவகாரத்தில் அரசு முடிவு எடுத்துள்ளது” என்றார்.

மேலும் படிக்க