• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாதி என்ற விடயம் மீண்டும் மாணவர்கள் மத்தியில் வளர துவங்கியுள்ளது – இயக்குநர் சமுத்திரக்கனி

August 5, 2019 தண்டோரா குழு

புதிய கல்வி கொள்கை குறித்து அனைவருக்கும் வருத்தம் இருக்கின்றது. சூர்யா துவங்கி வைத்து இருக்கின்றார். அனைவரும் இதைபற்றி பேசி தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என நடிகரும் ,இயக்குனருமான சமுத்திரகனி தெரிவித்தார்.

கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகரும் , இயக்குனருமான சமுத்திரகனி
செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

புதிய கல்வி கொள்கை தொடர்பாக சூர்யாவின் கருத்து வரவேற்கத்தக்கது. கிராமப்புற மாணவர்களுக்கானதை நடிகர் சூர்யா பேசியிருக்கிறார். புதிய கல்வி கொள்கை குறித்து அனைவருக்கும் வருத்தம் இருக்கிறது. சூர்யா துவங்கி வைத்து இருக்கின்றார்.அனைவரும் இதைபற்றி பேசி தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சாதி என்ற விடயம் மீண்டும் மாணவர்கள் மத்தியில் வளர துவங்கியுள்ளது. கல்லூரி மாணவர்கள் கையில் சாதிக்கொன்று தனியாக கலர், கலராக கயிறு கட்டி திரிகின்றனர். சாதி என்பது இப்போது பள்ளிகளிலும் வந்து விட்டது. திரும்பவும் படங்கள் மூலமாக மூளை சலவை செய்து சாதியை தள்ளி வைத்து விட்டு பயணப்பட்டால் மட்டுமே மனிதராக முடியும்.சாதி வேறுபாடு மீண்டும் திரும்ப ஆரம்பித்து விட்டது.

இந்தி தேவை எனில் படித்து கொள்ள வேண்டியதுதான்.சென்னையில் ரவுடியிசம் செய்யும் கல்லூரி மாணவர்களின் கையை உடைக்கும் நிலை குறித்த கேள்விக்கு, தண்டணைகள் கடுமையாக இருந்தால் மட்டுமே தவறுகளை தடுக்க முடியும்.பேசிகிட்டே இருந்தால் எதுவும் நடக்காது.அதிரடியாக ஏதாவது செய்ய வேண்டும்.செத்துவிடுவேன் என்ற பயம் இருந்தால்தான் பாலியல் தவறு செய்யமாட்டார்கள். அது போல சில விவகாரங்களில் பயம் கொடுப்பதில் தவறில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

சாட்டையை தொடர்ந்து ஒரு படத்தில் பேராசிரியராக நடிப்பதாகவும், அப்பா 2 படத்திற்காக லொக்கேஷன் பார்க்க வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க