• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியா- நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் நடக்குமா ? நீதிபதி லோதா விளக்கம்

October 4, 2016 தண்டோரா குழு

பிசிசிஐ வாரியத்தின் வங்கிக் கணக்குகளில் இருந்து பண பரிவர்த்தனையை முற்றிலுமாக முடக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு லோதா கமிட்டி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான தொடர் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் ஊழல் வழக்கின் ஒரு பகுதியாக பிசிசிஐயை சீரமைக்கப்பதற்காக சில பரிந்துரைகளை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட லோதா கமிட்டி அளித்தது. ஆனால் பிசிசிஐ அந்த பரிந்துரைகளை ஏற்க தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிசிசிஐக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது உச்ச நீதிமன்றம்.

இந்நிலையில் பிசிசிஐ கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு லோதா கமிட்டி எழுதியுள்ள கடிதத்தில், “பிசிசிஐயின் வங்கிக் கணக்கில் இருக்கும் பெரும்பாலான பணத்தை அதன் உறுப்பு சங்கங்களின் வங்கிக் கணக்கிற்கு மாற்றுவது என செப்டம்பர் 30-ஆம் தேதி நடந்த சிறப்பு பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது சட்டவிரோதமான செயலாகும். எனவே அவர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை நிறுத்தி வையுங்கள் என குறிப்பிட்டுள்ளது. இதனால் பிசிசிஐ பெரும் அதிரிப்தியில் உள்ளது.

வங்கிக் கணக்கை ரத்து செய்வது போன்ற நடவடிக்கையை லோதா கமிட்டி எடுத்தால் பிசிசிஐ நியூஸிலாந்து தொடரை ரத்து செய்வது குறித்து யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து முன்னாள் நீதிபதி லோதா கூறும்போது,

வழக்கமான விவகாரங்களுக்கு பணம் அளிப்பதை நாங்கள் தடுக்கவில்லை. பெரும்பாலான பணத்தை அதன் உறுப்பு சங்கங்களின் வங்கிக் கணக்குக்கு மாற்றுவதை தான் நிறுத்தி வைத்துள்ளோம். இதை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். ஆகையால் நியூஸிலாந்து தொடர் ரத்து செய்யப்படவில்லை என்று கூறினார்.

மேலும் படிக்க