• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாட்டிறைச்சி தொடர்பாக கருத்து தெரிவித்த நிர்மல் குமார் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 31, 2019 தண்டோரா குழு

கோவையில் மாட்டிறைச்சி தொடர்பாக கருத்து தெரிவித்த திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவையில் மாட்டிறைச்சி தொடர்பாக முகநூலில் கருத்து தெரிவித்த திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் நிர்மல்குமார் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே நிர்மல்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. நிர்மல்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஞானசம்பந்தம் உத்தரவிட்டார்.

இந்நிலையில் நிர்மல்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் திவிக, திக, தபெதிக, சிபிஎம், விசிக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 70 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன்,நிர்மல் குமாரை தனிமை சிறையில் அடைத்து வைத்து துன்புறுத்துவதாக புகார் தெரிவித்தார்.மேலும் கருத்தூரிமையை பறிக்கும் வகையில் நிர்மல்குமார் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அதிமுக அரசு அண்ணா கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் படிக்க