• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

Man vs Wild நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி ஒரு சாகசப் பயணம்!

July 29, 2019 தண்டோரா குழு

உலகம் முழுவதும் பிரபலமான தொலைக்காட்சி தொடரான Man vs Wild நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சிகான டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

Discovery தொலைக்காட்சியின் Man VS Wild நிகழ்ச்சி உலகம் முழுவதும் மிக பிரபலமான ஒன்றாகும். இந்த நிகழ்ச்சியை பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கி வருகிறார். யாரும் செல்லாத காடுகள், பாலைவனங்கள், பனி பிரதேசங்களுக்கு சென்று இவர் பல சாகசங்கள் புரிந்து அனைவரியும் ஆச்சரியப்படுத்துவார். இந்நிலையில்,இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். இதற்கான ட்ரெய்லரை பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பியர் கிரில்ஸ்,

180 நாடுகளில் உள்ளவர்கள் பிரதமரின் அறியப்படாத பக்கத்தைப் பார்க்க இருக்கிறார்கள். விலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அவர் இந்திய வனப்பகுதிக்குச் சென்றுள்ளார் என பதிவிட்டுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆகஸ்ட் 12-ம் தேதி இரவு 9 மணிக்கு பிரதமர் மோடி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க