• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அற்புதம்மாள் மனு

July 29, 2019 தண்டோரா குழு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அற்புதம்மாள் மனு அளித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை, விடுதலை செய்ய தமிழக அரசு ஆளுநருக்கு கடந்த செம்டம்பர் மாதத்தில் பரிந்துரை செய்தது. ஆனால், 10 மாதங்களாகியும் இது தொடர்பாக ஆளுநர் இது எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்தநிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரம் தொடர்பாக விசிக எம்.பி.க்கள் தொல். திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினர். அப்போது 7 பேரையும் விரைவில் விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள்,

விடுதலைக்காக 28 ஆண்டுகள் தொடர்ந்து போராடி வருகிறோம். ஆளுநரிடம் இருந்து நல்ல செய்தி வரும் என நம்புகிறேன். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்து தந்தனர், உள்துறை அமைச்சரை சந்தித்தால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வந்தேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க