• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாட்டிறைச்சி சாப்பிட்டு முகநூலில் பதிவிட்ட விவகாரத்தில் கோவை திவிக மாவட்ட செயலாளர் கைது

July 27, 2019 தண்டோரா குழு

மாட்டிறைச்சி சாப்பிட்டு முகநூலில் பதிவிட்ட விவகாரத்தில் கோவை திராவிடர் விடுதலை கழக செயலாளர் நிர்மல் குமாரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

அண்மையில் நாகையில் மாட்டு கறி சாப்பிட்டதை முகநூலில் பதிவிட்டதற்காக இசுலாமிய தோழரை தாக்கிய இந்து மக்கள் கட்சியினரை கண்டித்து,முகநூலில் பதிவிட்ட கோவை திவிக மாவட்ட செயலாளர் நிர்மல் குமாரை கைது செய்யபட்டு சிறையிடைக்கப்பட்டார். நாகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இஸ்லாமியர் ஒருவர் மாட்டுகறி சாப்பிட்டத்தாக முகநூலில் பதிவிட்டிருந்தார். இந்த முகநூல் பதிவை நீக்ககோரி இந்து மக்கள் கட்சியினர் இஸ்லாமிரை தாக்கியதில் அவர் காயமடைந்தார். இந்த சம்பவம் பல்வேறு தரப்பினரையே அதி்ர்ப்தியை ஏற்படுத்தி வந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து திராவிடர் விடுதலை கழகத்தின் கோவை மாவட்ட செயலாளர் நிரமல்குமார் கடந்த 17-ம் தேதி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார்.

இந்நிலையில் இந்த கருத்து இரு தரப்பபினரையிடையே மோதலை உருவாக்கும் விதமாக உள்ளதென மணி என்பவர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து நிர்மல்குமாரை வழக்கு பதிவு செய்து கைது செய்த காவல் துறையினர் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பதட்டத்தை உண்டாக்கும் வகையில் கருத்து பதிவிட்டதற்காக மாவட்ட முதன்மை நீதிபதி நிரமல்குமாரை பதினைந்து நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து கோவை மத்திய சிறையடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க