• Download mobile app
01 Sep 2026, TuesdayEdition - 3856
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முதல்வரின் உடல்நிலை குறித்த தகவலை மக்களுக்கு தெரிவிப்பது அரசின் கடமை- உயர் நீதிமன்றம்

October 4, 2016 தண்டோரா குழு

தமிழக முதல்வரின் உடல்நிலை தொடர்பாக அரசு அதிகாரிகள் அறிக்கை அளிக்க வேண்டும். மாநில முதல்வரின் உடல்நிலை குறித்த தகவலை மக்களுக்கு தெரிவிப்பது, அந்த மாநில அரசின் கடமை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மை நிலவரங்களை வெளியிடக் கோரியும், அவர் பரிபூரணமாக குணமடைந்து பணிக்கு திரும்பும் வரை தற்காலிக முதல்வரை அறிவிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவின் விசாரணையில் மாநில முதல்வரின் உடல்நிலை குறித்த தகவலை மக்களுக்கு தெரிவிப்பது அந்த மாநில அரசின் கடமை. அவ்வாறு தெரியப்படுத்துவதில் தவறில்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அப்போழுது அரசுத் தரப்பு வழக்கறிஞர், முதல்வரின் உடல்நிலை தொடர்பாக அப்போலோ மருத்துவமனை சார்பில் அவ்வப்போது மருத்துவ அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன என்றார்.

அதற்கு நீதிபதிகள், தனியார் மருத்துவமனையின் அறிக்கை வெளியிடப்பட்டாலும் முதல்வரின் உடல்நிலை தொடர்பாக அரசு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிப்பது கடமையாகும் என்றனர். மேலும் இந்த மனு மீதான விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்தனர்.

மேலும் படிக்க