• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவிற்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு!

July 23, 2019 தண்டோரா குழு

உலகக்கோப்பை நிறைவடைந்த நிலையில் இந்திய அணி, ஆகஸ்ட் மாதம் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒரு நாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செல்ல உள்ள இந்திய அணி கடந்த ஞாயிற்று கிழமை அறிவிக்கபட்டது. அந்த அணியில் தீபக் சாஹர், குர்ணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்தியாவிற்கு சவால் கொடுக்கும் வகையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி வீரர் பொல்லார்டு, சுழற் பந்துவீச்சாளர் சுனில் நரேன் அணிக்கு திரும்பி உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் விபரம்:

பிராத்வெயிட் (கேப்டன்), ஜான் கேம்பல், எவின் லெவிஸ், ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், பொல்லார்டு, ரோவ்மன் பாவெல், கீமா பால், சுனில் நரேன், காட்ரல், ஓஷானே தாமஸ், அந்தோணி பிராம்பிள், ஆண்ட்ரே ரசல், காரி பியர்ஸ்

மேலும் படிக்க