• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்!”- முதல்வர் பழனிசாமி

July 20, 2019

ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. கூட்டுறவு, பொதுப்பணித்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் பல அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

இந்நிலையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பர் முதல் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அந்த வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாள் சிறப்பாக கொண்டாடப்படும்.1956-ம் ஆண்டு நவம்பர் முதல் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. ஏற்கனவே, நவம்பர் முதல் தேதியை, கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் மாநில தினமாக கொண்டாடி வருகிறது என கூறியுள்ளார்.

மேலும்,தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் இருக்கை அமைக்கப்படும் மற்றும் திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்

மேலும் படிக்க