• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை கோரி மனு

July 19, 2019 தண்டோரா குழு

வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கபட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை கணபதி பகுதியில் கேய்டின்ஸ் வேலை வாய்ப்பு மையம் என்ற நிறுவனத்தை பிரின்ஸ் டேனியல் மற்றும் அவரது மனைவி கரிஷ்மா டேனியல் ஆகியோர் நடத்தி வந்துள்ளனர். மலேசியா,சிங்கப்பூர், ஐரோப்பா நாடுகளில் அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்பு என விளம்பரபடுத்தியதை அடுத்து அங்கு ஏராளமான மாணவர்கள் வேலைக்கு விண்ணபித்து உள்ளனர்.

ஒவ்வொருவரிடமும் தலா 2 லட்சம் வரை பணத்தை வாங்கி கொண்டு வேலை வாங்கி காலம் தாழ்த்தி இழுத்தடிப்பு செய்துள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த பணம் செலுத்தியவர்கள் பிரின்ஸ் டேனியலை அணுகி பணத்தை திருப்பி கேட்டபோது வெளிநாடுகளில் வேலை கிடைக்க முன்பணமாக செலுத்தி விட்டதாகவும் பணமெல்லாம் திருப்பி கொடுக்க முடியாது என கூறியுள்ளார்.மேலும் தான் நீலகிரி மாவட்ட ரஜினிகாந்த் மன்ற இளைஞர் அணி துணை செயலாளராக இருப்பதாகவும் தனக்கு அரசியல் பலம் இருப்பதாக கூறி பணம் செலுத்தியவர்களை மிரட்டி உள்ளார்.

இது குறித்து பாதிக்கபட்டவர்கள் கூறுகையில்,

பிரின்ஸ் டேனியல் இதேபோல் வேலை வாய்ப்பு நிறுவனத்தை நீலகிரியில் இயக்கி வந்ததாகவும் அதுவும் தற்போது மூடபட்டு அவரும் அவரது மனைவியும் தலைமறைவாக உள்ளதாக தெரிவித்தனர்.மேலும் இது குறித்து காவல் துறையினரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

300கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி உள்ளதாகவும் சுமார் 6 கோடி ரூபாய் வரை ஏமாற்றி உள்ளதாக கூறியவர்கள் செலுத்திய பணத்தை திரும்ப கிடைக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் படிக்க