• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தொடர்ந்து சந்தன மரங்களை வெட்டி கடத்தும் கும்பல் போலீசார் திணறல்

July 19, 2019 தண்டோரா குழு

கோவை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான சந்தன மரங்கள் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கோவை ராம் நகர், சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் சந்தன மரங்கள் தொடர்ந்து மர்ம நபர்களால் வெட்டப்பட்டு நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் சாய்பாபா காலனியில் சந்தன மரத்தை வெட்டி கடத்தும் போது போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடிக்க முற்பட்டபோது அவர்கள் ஓட்டி வந்த காரை பாதியிலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். பின்னர் போலீசார் அந்த காரை அந்த காரில் கட்டப்பட்டிருந்த சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கோவை நகரின் முக்கிய பகுதியான பந்தய சாலையில் உள்ள பிரபல நிறுவனத்தின் முன்பு உள்ள சந்தனமரம் மர்மநபர்களால் வெட்டி கடத்தப்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்த போதும் சந்தன மரக் கொள்ளையர்கள் மரத்தை வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று இடங்களில் மர்ம நபர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்துள்ளனர் இதில் சாய்பாபா காலனி நடைபெற்ற கொலை சம்பவத்தில் மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க