• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொட்டும் மழையில் கழிவு நீர் அடைப்பை சரி செய்த போக்குவரத்து காவலர்

July 18, 2019

கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்தது. இந்த நிலையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மழை பெய்ய தொடங்கியது. கோவை ராமநாதபுரம், சித்ரா, ரெயில் நிலையம், அவினாசி சாலை மேம்பாலம், சிங்காநல்லூர், உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இந்நிலையில் கோவை இரயில் நிலையம் பகுதியில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் சாக்கடையுடன் கலந்து அருகில் உள்ள லங்கா கார்னர் பாலத்தின் கீழ் நிறைந்து வழிந்தது.வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளான நிலையில் சாலையில் சாக்கடையில் மழை நீர் செல்ல வழி இல்லாததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

அப்போது அங்கு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் ஜான் கென்னடி மற்றும் பாண்டி ஆகியோர் இணைந்து உடனடியாக பாலத்தில் இருந்த நீரை அப்புறப்படுத்துவதிலும், அடைந்த நிலையில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்ய துவங்கினா்.இதனால் வெள்ளம் மெதுவாக வழிந்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.இதனை கண்ட பொதுமக்கள் போக்குவரத்து காவலர்களை பாராட்டி சென்றனர்.

மேலும் படிக்க