• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தமிழ் தேச இறையாண்மை என்ற புதிய கட்சியின் கொடி மற்றும் சின்னம் அறிமுகம்

July 18, 2019 தண்டோரா குழு

தமிழ் தேசியத்தின் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறையை தடுப்பதே தமிழ் தேச இறையாண்மை கட்சியின் முக்கிய நோக்கம் என்று அக்கட்சியின் தலைவர் திருமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ் தேச இறையாண்மை என்ற புதிய கட்சி துவங்கப்பட்டது குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிகையாளர்கள் சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இக்கட்சியின் கொடி மற்றும் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், செங்காந்தள் மலர் இக்கட்சியின் சின்னமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமொழி, மதவாத மற்றும் சாதிய சக்திகள் தமிழகத்தை பிரித்தாள்கிறது என்று குற்றம்சாட்டினார். வடநாட்டவர்கள் கைக்கு தமிழகம் சென்று கொண்டிக்கிறது என்று கூறிய அவர், தமிழ் தேசியத்தை முன்னெடுக்கும் கட்சியாக திமுகவை ஒருபோதும் கருதவில்லை என்று திருமொழி விமர்சித்தார்.

மேலும் படிக்க