• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை நாடார் சங்கத்தினர் மரியாதை

July 15, 2019 தண்டோரா குழு

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் வடகோவையில் அமைந்துள்ள காமராஜரின் திருஉருவ சிலைக்கு நாடார் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெருந்தலைவர் காமராஜரின் 117 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் உலகமெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது இதன் ஒரு பகுதியாக கோவையில் வடகோவை பகுதியில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவச்சிலைக்கு கோவை நாடார் சங்கம் சார்பில் தலைவர் சூலூர் சந்திரசேகர் செயலாளர் ராஜா ஆகியோர் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின் செய்தியாளரிடம் பேசிய தலைவர் சூலூர் சந்திரசேகர்,

தமிழகத்தில் வாழ்ந்த மிக அற்புதமான தலைவர் காமராஜர் அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து பிறந்தநாளை கொண்டாடுவதில் கோவையில் உள்ள அனைத்து நாடுகளும் பெருமை கொள்கிறோம் இப்பேர்ப்பட்ட தலைவர் இனி எப்பொழுதும் பிறப்பதில்லை காமராஜர் போல் அப்பனுக்கு இல்லா வாழ்க்கை வாழ நாம் உறுதி ஏற்போம் என்று கூறினார் மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் வெங்கடாச்சலம் மற்றும் காயத்திரி மற்றும் சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் கூடியிருந்தனர்.

மேலும் படிக்க