• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் துவங்கியது அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சி !

July 13, 2019

கோவை கொடீசியா தொழிற்காட்சி வளாகத்தில் துவஙகியுள்ள அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியில் விவசாயிகளுக்கான விதைப்பு முதல் அறுவடை வரை நவீன தொழில்நுட்பங்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் கொடீசியா சார்பில் ஆண்டுதோறும் அக்ரி இன்டெக்ஸ் எனப்படும் விவசாய தொழில்நுட்ப கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தமுறை 19 ஆண்டாக நடைபெறும் கண்காட்சியானது 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் 460 அரங்குகள் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் தங்களது நவீன விவசாய தொழில்நுட்ப கருவிகளை காட்சிப்படுத்தியிருந்தனர். உழவுக்கருவிகள், ஆர்கானிக் உரங்கள், வேளான் உபகரணங்கள், தண்ணீர் இறைக்கும் பம்புகள், நவீன சொட்டு நீர் பாசனக்கருவிகள் என கண்காட்சியில் உழவு முதல் அறுவடை இயந்திரங்கள் வரை அனைத்து விவசாயத்துக்கும் உதவும் வகையில் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாதிரி விவசாயப் பண்ணை, காங்கேயம் காளைகள் போன்றவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேளாண் கருத்தரங்கை தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணன், நகராட்சி நிர்வாகம் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி ஆகியோர் துவக்கி வைத்து கண்காட்சி மலரை வெளியிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி ல
இரு மொழி கொள்கை தான் நம்முடையது என முதல்வரும் துணை முதல்வரும் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்
தமிழ் தான் அனைத்து இடங்களில் வர வேண்டும் எனவும்,
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் கூறினார்.

மேலும் படிக்க