• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 4600 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது – கமிஷ்னர்

July 13, 2019 தண்டோரா குழு

கோவை மாநகர காவல் துறை சார்பில் மாநகர் முழுவதும் இதுவரை 4600 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டுக்கு பிறகு 50 முதல் 60 சதவீத குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையம் சார்பில் சுமார் 200 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அதற்கான நவீன கட்டுப்பாட்டு அறை மற்றும் காவல் உதவி மையம் இன்று திறக்கப்பட்டது. காந்திபுரம் திருவள்ளூர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுப்பாட்டு மையத்தை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் திறந்து வைத்து கேமராக்களின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.

அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், சிசிடிவி கேமரா என்பது மூன்றாவது கண்ணாக பார்க்கப்படுவதாகவும் சிசிடிவி கேமராக்கள் மூலம் பெருவாரியான குற்றச்சம்பவங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.மேலும் இதன்மூலம் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் கண்டறிய படுவதாகவும் விபத்து சம்பவங்களின் போது அதன் தன்மை அறிய எளிதாக இருப்பதாகவும் கூறியதுடன் பொதுமக்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக சிசிடிவி கேமராக்கள் திகழ்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

கோவை மாநகரில் காவல்துறை சார்பில் சுமார் 4600 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் இருப்பதாகவும் அடுத்த மூன்று மாதத்திற்குள் மாநகரில் உள்ள ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் தலா 50 கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு மாநகரில் 50 முதல் 60 சதவிகித குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும் அண்மையில் தனியார் தங்கநகை பைனான்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் 24 மணி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார் கோவை மாநகர காவல் ஆணையர்

மேலும் படிக்க