• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நான் விளையாடியிருந்தால், இந்தியா ஜெயித்திருக்கும்” : அமைச்சர் ஜெயக்குமார்

July 11, 2019

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நான் விளையாடியிருந்தால், இந்தியா ஜெயித்திருக்கும்” :என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர், அழகு முத்துக்கோனின் 262வது பிறந்தநாளையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,

இந்தியாவிலேயே ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் என்று தெரிவித்தார். நீட் மசோதா தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், நீட் தேர்வுக்கு காரணமே திமுக, காங்கிரஸ் கூட்டணி தான் என்று குற்றம்சாட்டினார்.

மேலும், அதிமுகவுக்கு ஏற்பட்டதைப் போல், இந்திய அணிக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிமுகவும், இந்திய அணியும் தோல்வியிலிருந்து மீண்டு வரும்.உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தான் விளையாடியிருந்தால், இந்தியா ஜெயித்திருக்கும் என்றும் கிண்டலடித்தார்.

மேலும் படிக்க