• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முஸ்லீம் இளம்பெண்ணின் ஆண் நண்பர்களை மதம் மாற வற்புறுத்திய இருவர் கைது

July 10, 2019 தண்டோரா குழு

கோவையில் முஸ்லீம் இளம்பெண்ணின் ஆண் நண்பர்களை மதம் மாற வற்புறுத்தி அடித்து உதைத்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை கரும்புக்கடை, அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் நிஷா வயது 20 .( பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார். நிஷா கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளார். இந்நிலையில் மாற்று சான்றிதழ் வாங்குவதற்காக கல்லூரிக்கு சென்றுவிட்டு, தனது ஆண் நண்பருடன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். வீட்டினருகே நிஷா தனது நண்பருடன் வந்த இரு சக்கர வாகனத்தில் வந்த போது தடுத்து நிறுத்திய இருவர் , நீ இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெண், இப்படி ஆண் நண்பர்களுடன் வாகனத்தில் வருவது சரியா ? தவறா ? என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

நிஷாவை வழி மறித்து இருவர் மிரட்டுவதை பார்த்து அவரது அம்மாவும் அந்த இடத்திற்கு வந்துள்ளார். அப்போது இரு நபர்களும், இஸ்லாம் முறைப்படி உன் மகளுக்கு நூறு கசையடி வழங்க வேண்டும் என மிரட்டி, அவர்களின் பெல்ட்டை கழட்டி கொடுத்து அடிக்கக் கூறியதாக தெரிகிறது. பயந்து போன அவர் தனது மகளை பெல்ட்டால் நூறு முறை அடித்ததாக தெரிகிறது. நிஷாவை போகச்சொல்லிவிட்டு அவரது ஆண் நண்பர்களை கரும்புக் கடையிலுள்ள ஒரு கடையில் அடைத்து வைத்து , மதம் மாறக்கூறி ஐந்து மணி நேரம் அடித்து உதைத்துள்ளனர். கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததோடு, பீளமேட்டிலுள்ள அவரது பெற்றோர்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

பிரச்சனை வேறு திசையில் செல்வதை உணர்ந்த நிஷாவின், அம்மாவும் அவரது குடும்பத்தினரும் பயந்துபோய் நிஷா படித்த கல்லூரியில் உள்ள ஹாஸ்டலில் இரண்டு நாள் தங்கியுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து பாதுகாப்புக்காக கோவை மாநகர காவல்துறை கண்காணிப்பாளர் சுமித்சரன் அவர்களை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.கோவை மாநகர காவல்துறை ஆணையரின் உத்திரவின் பேரில் , வழக்கு பதிவு செய்த குனியமுத்தூர் காவல் துறையினர் கரும்புக்கடை பகுதியில் வசிக்கும் அலி என்பவரது மகன் ஷபியுள்ளா, மற்றும் கோவை குனியமுத்தூர், குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த சுலைமான் என்பவரின் மகன் இப்ராஹிம், ஆகிய இருவரையும் கைது செய்து நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.

இஸ்லாமியர்கள் இந்துக்கள் ஒற்றுமையாக இருக்க காவல் துறை அனைத்து சமுதாய மக்களிடம் நல்லூறவை ஏற்படுத்தும் வண்ணம் கூட்டங்கள் நடத்தி வரும் நிலையில் நடைபெற்ற இச்சம்பவம் இருதரப்பினரிடமும் பதட்டத்தை உருவாக்கி இருக்கிறது.

மேலும் படிக்க