• Download mobile app
23 Dec 2025, TuesdayEdition - 3604
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என இலங்கை தமிழர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிம் மனு

July 8, 2019

கோவை பூலுவபட்டியில் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் 310 குடும்பத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என இலங்கை தமிழர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் பூலுவபட்டியில் உள்ள இலங்கை அகதி முகாமில் 310 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். 25 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகளாக வாழ்ந்து வரும் இவர்கள் காவல் துறையினரின் கண்காணிப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அகதிகள் முகாமில் உள்ள நிர்வாகிகள் இன்று தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கேட்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

பின்னர் பேசிய அவர்கள்,

பூலுவபட்டி அகதிகள் முகாமில் உள்ள 310 குடும்பத்தினருக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். தொடர்ந்து மூன்று தலைமுறையாக வசிக்கும் தாங்கள் இங்கேயே தொடர்ந்து வாழ விரும்புகின்றோம்.
தங்கள் குழந்தைகளும் இங்கேயே தொடர்ந்து வாழ விரும்புவதால் குடியுரிமை வழங்க வேண்டும், இதே போல தமிழகம் முழுவதும் 112 இலங்கை அகதிகள் முகாம்கள் இருப்பதாகவும் இதில் ஓரு லட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் இருப்பதாகவும், அவர்களில் தமிழகத்தில் தொடர்ந்து இருக்க விரும்புபவர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் தெரிவித்தார்.

மேலும் படிக்க