• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சாணி பவுடரை கலந்து கூட்டாஞ்சோறு உண்ட சிறுவர் சிறுமியர்கள் மருத்துவமனையில் அனுமதி

July 8, 2019 தண்டோரா குழு

கோவை தடாகம் அருகே மஞ்சள் தூள் என நினைத்து, சாணி பவுடரை கலந்து கூட்டாஞ்சோறு உண்ட சிறுவர் சிறுமியர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை தடாகம் அருகே உள்ள திருவள்ளுவர் நகரில் ஐந்து சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவர் என ஆறு பேரும் நேற்று இரவு ஒன்பது முப்பது மணி அளவில் கூட்டாஞ்சோறு செய்து விளையாண்டு கொண்டிருந்தனர். அப்போது சிறுமிகள் சோற்றில் மஞ்சள் தூளுக்கு பதில் தவறி, சாணி பவுடரை கலந்து விட்டனர். பின்னர் இதை அறியாத குழந்தைகள் உண்ணும் பொழுது கசப்படிப்பதை அறிந்து சோற்றை வைத்துவிட்டு தங்களது பெற்றோர்களிடம் தகவல் அளித்தனர்.

இதையடுத்து பதறிய பெற்றோர்கள் உடனடியாக சாணி பவுடர் கலந்த உணவை உண்ட லோகேஸ்வரி(12), அனுசியா(8), முகுந்தன்(8),ஜீவிதா(14),ஹரிணி (13) மற்றும் யாழினி(5)என ஆறு பேரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இங்கே இவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து உடல்நலம் தேறிய குழந்தைகளை ஒருங்கிணைந்த குழந்தைகள் நல மையத்திற்கு மாற்றியுள்ளனர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தடாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவர் சிறுமிகள் விளையாண்டு கொண்டிருந்த விளையாட்டில் ஆபத்தான சாணி பவுடர் கலந்தது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க