• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் முகவரி கேட்பது போல் நடித்து முதாட்டியிடம் செயின் பறிப்பு

July 8, 2019

கோவையில் முகவரி கேட்பது போல் நடித்து முதாட்டியிடம் செயின் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் அடுத்த மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி முருகாத்தாள் (69). இவர் நேற்று காலை கடைக்கு சென்றுவிட்டு சுந்தராபுரம் மாச்சம்பாளையம் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிள் வந்த மூன்று இளைஞர்கள் முருகாத்தவிடம் முகவரி கேட்பது போல் பேசி உள்ளனர். அப்போது திடிரென அவர் கழுத்தில் அணிந்திரந்த 4 சவரன் தங்க செயினை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

மூதாட்டி கூச்சலிட்டதை அடுத்து செயினை பறித்தவர்களை பொதுமக்கள் விரட்டி சென்றனர். ஆனால் அதற்குள் கொள்ளையர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர். சம்பவம் தொடர்பாக முருகாத்தாள் கொடுத்த புகார் அடிப்படையில் குனியமுத்தூர் போலிசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க