• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டி

July 6, 2019

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார்.

தமிழகத்தில் கனிமொழி (திமுக), கே.ஆர்.அர்ஜூனன் (அதிமுக), வி.மைத்ரேயன் (அதிமுக), ஆர்.லட்சுமணன் (அதிமுக), டி.ரத்தினவேல் (அதிமுக), டி.ராஜா (சிபிஐ), உள்ளிட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் வருகிற 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த 6 இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் வருகிற 18ம் தேதி நடைபெறுகிறது. 6 இடங்களுக்கு நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் திமுகவுக்கு 3, அதிமுகவுக்கு 3 இடங்கள் கிடைப்பது உறுதியாகி விட்டது.

இதற்கிடையில், திமுக சார்பில் வில்சன், சண்முகம் ஆகியோர் போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்தது. மேலும் வைகோ போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முகமது ஜான், சந்திரசேகரன் ஆகியோர் போட்டியிடுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. மேலும் மாநிலங்களவையில் ஒரு இடம் பாமவுக்கு ஒதுக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர்.

இந்நிலையில்,அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என அக் கட்சியின் நிறுவனர் ச.ராமதாசு அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க