• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாமதிக்காமல் கட்சிக்கு உடனே புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் – ராகுல் காந்தி

July 3, 2019 தண்டோரா குழு

தாமதிக்காமல் கட்சிக்கு உடனே புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு 352 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கூட்டணி அரசு 91 இடங்களில் வெற்றி பெற்றது. ராகுல் போட்டியிட்ட அமேதி தொகுதியில் ஸ்மிருதி ராணியிடம் தோல்வியடைந்தார். வயநாடு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார். இதையடுத்து மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் ராகுல் காந்தி. ஆனால் ராகுல் காந்தியின் ராஜினாமாவை ஏற்க காங்கிரஸ் காரிய கமிட்டி மறுத்தது. இதுமட்டுமின்றி ராகுல்காந்தியே தலைவராக தொடர விருப்பம் தெரிவித்துள்ளனர். கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் அறிவுறுத்தியும் தனது முடிவில் இருந்து அவர் பின்வாங்கவில்லை.

இந்நிலையில் கட்சி தலைமை புதிய தலைவரை விரைவில் தேர்வு செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில்,

நான் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டதால் தலைவராக நீண்ட நாட்கள் தொடர முடியாது. தலைவராக தொடர வேண்டும் என்று காங்கிரசார் பலகட்ட போராட்டங்கள் நடந்த நிலையில் ராகுல் கூறியுள்ளார். நான் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டேன்; இனிமேல் நான் காங்கிரஸ் தலைவராக நீடிக்க முடியாது. காங்கிரஸ் காரியக் கமிட்டிக் குழு உடனே கூட்டப்பட்டு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும். தாமதிக்காமல் கட்சிக்கு உடனே புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க