• Download mobile app
23 Dec 2025, TuesdayEdition - 3604
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேன் மீது எதிரே வந்த லாரி மோதிய விபத்தில் கோவையை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

June 29, 2019 தண்டோரா குழு

கேரள மாநிலம் பாலக்காடு அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதியதில் கோவையை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் பாலக்காடு சந்திரா நகர் பகுதியில் உறவினர் ஒருவருக்கு குழந்தை பிறந்ததால் அதனை காண கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 12 பேர் ஆம்னி வேன் ஒன்றில் பாலக்காட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த முகம்மது ஷாஜகான் என்பவர் வேனை ஓட்டிய நிலையில் தமிழக எல்லையான வாளையாறை கடந்து சென்றபோது சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரி மீது வேன் பலமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் ஓட்டுநர் ஷாஜஹான் மற்றும் வேனில் பயணம் செய்த பைரோஸ் பேகம் குழந்தைகளான ஆலுவா ஷூஃபியா,ஷெரின்,ரியான் உட்பட ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் வேனில் பயணித்த 7 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த சூழலில் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக அவர்களை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கோவையிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் தகவலறிந்து விரைந்து சென்ற வாளையாறு காவல்நிலைய போலீசார் ஐந்து பேரின் சடலங்களை மீட்டு பிரேத
பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கண்டெய்னர் லாரியை நிறுத்தி வைத்திருந்த ஓட்டுநரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க