• Download mobile app
23 Dec 2025, TuesdayEdition - 3604
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக என்பது தாய் வீடு இங்கிருந்து சென்றவர்கள் மீண்டும் வரலாம் – பொள்ளாச்சி ஜெயராமன்

June 28, 2019 தண்டோரா குழு

அதிமுக என்பது தாய் வீடு இங்கிருந்து சென்றவர்கள் மீண்டும் வரலாம் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

அதிமுகவை பொருத்தவரை கட்சியில் இருந்து விலகி வேற கட்சிக்கு செல்பவர்களால் துளி பாதிப்பும் இல்லை.சிறப்பாக பணியாற்றியவர்கள் மீண்டும் வருவார்களேயானால் முதல்வரும் துணை முதல்வரும் ஏற்றுக்கொள்வார்கள். இயக்கம் வலுவாக உள்ளது. சந்தர்ப்பவாதிகளை பற்றி கவலை இல்லை.எம் ஜி ஆர், அம்மா வழியில் வந்தவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைவார்கள். அமமுகவில் உள்ள எம்ஜிஆர், அம்மா விஸ்வாசிகள் விரைவில் அதிமுகவில் இணைய வேண்டும். அமமுக தோன்றியதற்கான காரணமே சரியில்லை. நாட்டு மக்களின் சேவைக்காகவே ஒரு கட்சி துவங்க வேண்டும். இரண்டு ஆண்டுகளாக மழை இல்லை. இருந்தபோதிலும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அதிமுக அனைத்து வழியிலும் போராடிக்கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியிலும் இதுபோன்ற குடிநீர் பிரச்சனையை ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் குடிநீர் பிரச்சனை உள்ளது. அதேபோல்தான் தமிழகத்திலும் உள்ளது. அதனை சமாளிக்கின்ற ஆற்றல் அதிமுகவிற்கு உள்ளது.

அதிமுக என்பது தாய் வீடு இங்கிருந்து சென்றவர்கள் மீண்டும் வரலாம். கிராம அளவில் அதிக நிர்வாகிகள் மீண்டும் கட்சியில் இணைதுள்ளனர். அதிமுகவில் சர்வாதிகார மனப்பான்மை இல்லாமல் சிறப்பான முறையில் கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க