• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியரிடம் நூதன முறையில் மனு அளித்த மீனவர்கள்

June 28, 2019 தண்டோரா குழு

குளங்களில் மீன் பிடிப்பதற்கான உத்தரவை வழங்கிட கோரி கோவை வட்ட மீனவர் கூட்டறவு சங்கத்தினர் தரையில் வலை வீசி நூதன முறையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவையில் உள்ள 12 முக்கிய குளங்களில் கோவை வட்ட மீனவர் கூட்டறவு சங்கத்தினர் கடந்த பல ஆண்டுகளாக மீன் பிடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்துடன், இவர்கள் மீன் பிடிப்பதற்கான உத்தரவு காலம் முடிவடைந்துள்ளது. எனவே விரைவில் உத்தரவு வழங்கிட கோரி மீன் வலையுடன் மீனவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மனு அளிக்க வந்தனர்.

இதில் அடுத்து 5 ஆண்டிற்கு குளங்களில் மீன் பிடிப்பதற்காகன உத்தரவை ஜனவாரி மாதமே வழங்க வேண்டிய நிலையில், இதுவரை குளங்களில் மீன் பிடிப்பதற்கான உத்தரவை மாவட்ட நிர்வாகம் வழங்கவில்லை என குற்றம்சாட்டினர். இதனால் உரிய அனுமதியின்றி குளங்களில் மீன் பிடிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுவதாகவும், பல்வேறு நபர்களும் மீன் பிடிக்க வருதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவதாக குற்றம்சாட்டினர். எனவே தங்கள் கோரிக்கையை நிறைவேற்றிட கோரி மீன் பிடிப்பது போல தரையில் வலை வீசியும், வலைக்குள் அமர்ந்து தூதன முறையில் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க