• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சியில் பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து மிரட்டிய ஐந்து இளைஞர்கள் கைது

June 25, 2019 தண்டோரா குழு

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்க கூறி மிரட்டி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட ஐந்து இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி ஆனைமலை பகுதியை சேர்ந்த முகமது கபீர், இவர்களது நண்பர்கள் வசந்தகுமார், முகமது அர்ஷத், கமர்தீன், முகமது ரியாஸ் இவர்கள் 5 பேரும் பள்ளிக்கு செல்லும் மாணவிகளை வழிமறித்து செல்போன்களில் படம் பிடித்து காதலிக்க சொல்லி தொல்லை கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். மேலும் மாணவிகளின் புகைப்படங்களை பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மிரட்டியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் கூறியதையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து முகமது ரியாஸ் வசந்தகுமார் முகமது அந்த், கமருதீன் முகமது கபீர் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர். இவர்கள் 5 பேரும் பள்ளி மாணவிகளை மிரட்டிதோடு தட்டிக் கேட்ட மாணவிகளின் பெற்றோர்களுக்கு கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதால் இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முகமது சபீர் மீது மட்டும் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு பொள்ளாச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பள்ளி மாணவிகளை புகைப்படங்கள் எடுத்து மிரட்டி சமூக வலைத்தளங்களில் வாலிபர்கள் வெளியிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க