• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்கல் ஒப்படைப்பு

June 24, 2019 தண்டோரா குழு

ஆட்சியர் அலுவலகத்தில் விண்கல்லை நாசா மற்றும் இஸ்ரோ சேர்ந்த மாணவர்களின் ஆராய்ச்சிக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆட்சியரிடம் ஒப்படைப்பட்டது.

கோவை மாவட்டம் உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இலட்சுமி நாராயணன். இவர் வீட்டில் கடந்த 50 வருடமாக 5கிலோ 900 கிராம் எடையுள்ள விண்கல் இருந்துள்ளது. இந்நிலையில், நாசா மற்றும் இஸ்ரோ சேர்ந்த மாணவர்களின் ஆராய்ச்சிக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட ஆட்சியரிடம் விண்கல்லை ஒப்படைத்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

என் வீட்டில் கடந்த 50 வருடமாக 5கிலோ 900 கிராம் எடையுள்ள விண்கல் இருந்தது. சகோதரர் சிவசுப்பிரமணி விண்கல் குறித்து தெரிவித்ததார். மேலும் சமூக வலைதளங்கலீல் தொடர்ந்து இதைப்பற்றி படித்ததின் அடிப்படையில் விண்கல் என்று தெரியவந்தது. விண்கல் முக்கியத்துவம் தெரியவந்தை அடுத்து வானியல்துறை நாசா மற்றும் இஸ்ரோ சேர்ந்த மாணவர்களின் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு தேவைப்படும் என்பதாலும் ஆட்சியர் அலுவகத்தில் உள்ள புவியல் துறையில் ஒப்படைக்க வந்துள்ளதாக தெரிவித்தார்.

ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாளான திங்கள்கிழமை கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பது வழக்கம். திருநெல்வெலி ஒரே குடும்பத்தினர் தற்கொலைக்கு பிறகு புகார் மனு அளிக்க வருபவர்கள் அனைவரும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுவர். இந்நிலையில் இன்று கல்லுடன் வந்தவரை பார்த்தவுடன் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் போலீசார் விசாரித்து உள்ளே அனுமதித்தனர்.

மேலும் படிக்க