June 22, 2019
தண்டோரா குழு
மாநகரில் நடைபெறும் குற்ற சம்பவங்களை கட்டுபடுத்தவும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு விரைந்து கைது செய்யவும் கண்காணிப்பு கேமராக்கள் பெரிதும் உதவியாக இருப்பதாக கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகரில் நடைபெறும் குற்ற சம்பவங்களை கட்டுபடுத்தவும், குற்றவாளிகளை அடையாளம் கண்டு விரைந்து கைது செய்யவும்
மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகர காவல் துறையின் முயற்சியில் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல பழைய காவல் நிலையங்கள் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கோவை சி 3 சாயிபாபாகாலனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 8 லட்சம் மதிப்பீட்டில் 50 கண்காணிப்பு கேமராக்களும், 4 அரை லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சியும் சாலையும், 16 லட்சம் மதிப்பீட்டில் லிப்ட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்கவிழா சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதனை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரண் சுமித் சரண் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
இது போன்று கண்காணிப்பு கேமராக்கள் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க பெரிதும் உதவியாக இருப்பதோடு குறிப்பாக கோவையில் நடைபெற்ற பல்வேறு கொலை,கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க பெரிதும் உதவியாக இருந்ததாக தெரிவித்தார்.
விழாவில் துணை ஆணையாளர் சட்டம் ஒழுங்கு பாலாஜி சரவணன், குற்றப்பிரிவு ஆணையாளர் பெருமாள் மற்றும் உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள்,காவலர்கள் மற்றும் சாய்பாபா காலனி பகுதியை சுற்றியுள்ள சமூக அமைப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.