June 22, 2019
தண்டோரா குழு
இன்று நடத்திய வருணயாகம் நிச்சயம் பலன் தரும் என்றும் ஜோலார்பேட்டை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்களுக்கு கொடுக்கின்ற நீர் போக மீதமுள்ள நீரைக் தான் அதிகாரிகளின் முழு ஆய்வுக்கு பிறகு சென்னைக்கு எடுத்துவரப்படுவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை புறநகர் மாவட்டம் கழகம் சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை பேரூர் பட்டீசுவரர் கோவிலில் மழை பெய்ய வேண்டி வருண யாகம் நடைபெற்றது. இந்த யாகம் முடிந்த பிறகு செய்தியாளர்களைக் சந்தித்த அவர்,
ஜெயலலிதா அவர்களின் வழியில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ.பன்னீர்செல்வம் ஆனைக்கிணங்க பல விதமான திட்டங்களைக் செயல்படுத்தி வருவதாகவும்,மழை இல்லாத சூழலிலும் , நிலத்தடி நீர் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே இன்று அனைத்து மாவட்டங்களிலும் கோயில்களில் வருணா யாகம் நடத்தியுள்ளோம்.இந்த யாகம் நிச்சியம் பலன் தரும் என்று தெரிவித்தார்.
மேலும் ஜோலர்பேட்டையிலிருந்து அங்குள்ள மக்களுக்கு தண்ணீர் பிரச்சனை இல்லாத வகையில் சென்னைக்கு தண்ணிர் கொண்டு வரப்படும்.இதில் நான் எதிர்கட்சிகளைக் பற்றி விமர்சனம் செய்ய விரும்பவில்லை. நாங்கள் செய்த திட்டங்கள் மூலம் தண்ணீர் பிரச்சனையைக் தீர்ப்போம்.
ஜோலார்பேட்டையில் தண்ணீர் போதுமான அளவிற்க்கு இருப்பதாக அதிகாரிகளின் ஆய்வின் அடிப்படையிலே அங்கிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர முதலவர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காவிரி தண்நீர் விவாகரத்திலும் தான் எதிர்ப்பு உள்ளது.அங்கிருந்து நாம் தண்ணீர் கேட்கவில்லையா என்று கேள்வி எழுப்பிய அவர், ஜோலர்பேட்டையில் உள்ள கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக அங்கு காவிரி தண்ணீர் கூடுதலாக உள்ளதால் தான் அங்கிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.நமக்குள் ஒற்றுமையாக இருந்து நாம் ஒருவருக்கொருவர் தண்ணீரைக் பெற்றுகொள்ள வேண்டும் என்பதனால்தான் ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொடுக்க முதல்வர் அறிவித்திருப்பதாகவும்,ஆம்பூர் ,வாணியம்பாடி உள்ளிட்ட பகுதி மக்களுக்கு எப்போது கொடுக்கின்ற நீர் கொடுக்கப்படும். அங்கு பாதிப்பு ஏற்படதாவாறு தான் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்,சில பேர் வேண்டுமென்றே பிரச்சனையைக் ஊதி பெருக்குகிறார்கள் என்று குற்றம்சாட்டிய அவர்,சென்னை மக்களுக்கு தேவையான குடிநீரைக் நாங்கள் கொடுப்போம்..என்றும் அவர் தெரிவித்தார்.