• Download mobile app
23 Dec 2025, TuesdayEdition - 3604
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆரோக்கிய இதயத்திற்கு பயனுள்ள யோகா எனும் தலைப்பில் யோகா பயிற்சி

June 21, 2019 தண்டோரா குழு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவையில் ஆரோக்கிய இதயத்திற்கு பயனுள்ள யோகா எனும் தலைப்பில் யோகா பயிற்சிகள் நடைபெற்றது.

சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இத்தினத்தில் யோகா குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கோவை சூலூரில் உள்ள ஆர்.வி.எஸ்.சித்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பாக செந்தில் ஆண்டவர் திருமண மண்டபத்தில் இதயத்திற்கு யோகா எனும் தலைப்பில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.ஆர்.வி.எஸ்.குழுமங்களின் நிறுவனர் ஆர்.வி.குப்புசாமி தலைமையில் டாக்டர் ராமசாமி,ஸ்ரீவத்சன் ஆகியோர் முன்னிலையில் யோகா பயிற்சிகள் மற்றும் இயற்கை மருத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தொடர்ந்து இதில்,கலந்து கொண்ட கல்லுாரி மாணவ‚ மாணவிகளுக்கு யோகாவின் அவசியம் குறித்தும்‚ யோகா செய்யும் முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கீதா உட்பட பலர் கலந்து கொண்டனர்..

மேலும் படிக்க