• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வாசிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் துவக்கம்

June 19, 2019 தண்டோரா குழு

மாணவ,மாணவிகளின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் விதமாக மாதம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ள வாசிப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் கோவையில் துவங்கப்பட்டது.

குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு ஒவ்வொரு ஜூன் மாதம் 19 ந்தேதி தேசிய வாசிப்பு தினமாக அறிவித்தது. கல்வியறிவை அதிக அளவில் உயர்த்தும் நோக்கத்தில் துவங்கப்பட்ட இத்திட்டத்தின் படி கோவை மாவட்ட கல்வித் துறை மற்றும் பொது நூலகங்கள் துறை சார்பாக தேசிய வாசிப்பு தினமான இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காலை 11 மணி முதல் 11.30 மணி வரை அரை மணி நேரம் வாசிப்பதைப் பயிற்சி செய்யும் ஒன்று படித்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் கோவையில் நடைபெற்றது.

தொடர்ந்து டவுன் ஹால் பகுதியில் உள்ள நூலகத்தில் நடைபெற்ற விழாவில், வாசிப்பு விழிப்புணர்வு வாகனத்தை விஜயா பதிப்பகம் வேலாயுதம் மற்றும் மாவட்ட மைய நூலகர் ராஜேந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இந்த விழிப்புணர்வு வாகனத்தில் இன்று துவங்கி ஒரு மாதம் முழுவதும் கோவையை சுற்றியுள்ள தொலைதூர கிராமங்கள் மற்றும் ஊராட்சிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவ,மாணவிகளிடம் வாசிப்பு பழக்கம் மற்றும் வாசிப்பின் நன்மைகள. குறித்து மாணவ,மாணவிகளிடம் எடுத்து கூற உள்ளதாக இந்த குழுவின் ஒருங்கிணைப்பாளரும்,நூலகரும் ஆன விஜயன் தெரிவித்துள்ளார்..

மேலும் படிக்க