• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருமணம் செய்ய மறுத்ததால், காதலன் மீது காதலி ஆசிட் வீச்சு !

June 17, 2019 தண்டோரா குழு

திருமணம் செய்ய மறுத்ததால், காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள விகாஸ்புரி பகுதியில், இளம்பெண் ஒருவர் காதலனுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை சரியாக தொட முடியவில்லை, என்று ஹெல்மெட்டை அகற்றுமாறு கூறியுள்ளார். அப்போது, அந்த இளம்பெண் காதலன் மீது ஆசிட்டை ஊற்றியுள்ளார்.. இந்த சம்பவம் நடந்த 11-ம் தேதி அன்று, போலீசாருக்கு இதுகுறித்து தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, மருத்துவமனைக்கு சென்று போலீசார் பார்த்துள்ளனர்.அப்போது, அந்த பெண்ணின் கைகளில் சிறிய காயம் இருந்தது. ஆனால் அந்த இளைஞருக்கு முகம், கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் எரிந்த காயங்கள் அதிகமாக காணப்பட்டன. பின்னர் போலீசார் விசாரிக்கையில் தாங்கள் பைக்கில் செல்லும் போது, ஆசிட் வீசப்பட்டது என்று அந்த ஜோடிகள் தெரிவித்துள்ளனர்.பல நாட்களாக ஆசிட் ஊற்றியது யார் என்று போலீசாருக்கு தெளிவாக தெரியவில்லை. பின்னர், அந்த இளைஞரிடம் விசாரணை செய்த போது, தன்னை ஹெல்மெட்டை கழற்றுமாறு அந்த பெண் கூறியதாக அவர் தெரிவித்தார். இதில் சந்தேகமடைந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை செய்த போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக குற்றவாளியை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் அந்த ஜோடிகள் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், திடீரென அந்த இளைஞர் உறவை முறித்துக் கொள்ள கூறியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் அந்த இளைஞரை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்த பெண், காதலனின் முகத்தை சிதைப்பதற்காக இந்த திட்டத்தை தீட்டியதாவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க