• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி அறிவிப்பு !

June 15, 2019 தண்டோரா குழு

தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ஏழை தாய்களுக்கு 15,000 ரூபாய் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது.அம்மாநிலத்தில் மொத்தம் உள்ள 171 சட்டமன்ற தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சுமார் 151 தொகுதிகளை கைப்பற்றி ஆந்திர மாநிலத்தின் முதல்வராக முதன் முறையாக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்டார்.

முதல்வராக பதவி ஏற்றது முதல் ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில்,தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ஏழை தாய்களுக்கு 15,000 ரூபாய் வழங்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் 2 ஆண்டுக்குள் ஆந்திராவில் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி அறிமுகம் செய்யப்படும் என்றும், அதே சமயம் தெலுங்கு கட்டாயப் பாடமாக கற்பிக்கப்படும் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

மேலும் படிக்க