• Download mobile app
23 Dec 2025, TuesdayEdition - 3604
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் மரணத்திற்கு லவ் ஜிகாத் காரணமா? – தந்தை கண்னீர் மல்க பேட்டி

June 13, 2019 தண்டோரா குழு

லவ் ஜிகாத் காரணமாக தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் மகளின் தற்கொலைக்கு காரணமான இளைஞரை கைது செய்ய வலியுறுத்தியும் தற்கொலை செய்து கொண்ட அப்பெண்னின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.

கோவைப்புதூர் பிரிவு பகுதியை சேர்நதவர் கங்காதாரன். இவரது மகள் அஸ்வினி கங்கா. கோவை க.க. சாவடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி தனது வீட்டின் அறையில் அஸ்வினி கங்கா தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இந்த வழக்கானது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தற்கொலை செய்து கொண்ட தனது மகள் லவ் ஜிகாத் காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் இது தொடர்பாக இதற்கு காரணமான அந்த இளைஞரை கைது செய்ய வேண்டும் என அப்பெண்ணின் தந்தை கங்காதாரன் பேட்டி அளித்தார்.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கங்காதாரன்,

எனது மகள் தற்கொலை செய்து கொண்ட போது அவரது அறையில் உள்ள கடிதம் உள்ளிட்ட சில பொருட்களை குனியமுத்தூர் காவல்துறையினர் விசாரணைக்காக எடுத்து சென்றனர். மறுநாள் காவல்நிலையத்திற்கு வர சொல்லி கையெழுத்து வாங்கினார்கள். எனக்கு எழுத படிக்க தெரியாது. கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது மகளின் செல்போன் கிடைத்தது. அதில் (ஜாபர் )என்கிற இளைஞர் மிரட்டும் வகையில் எனது மகளுக்கு மெஜேச் அனுப்பியுள்ளார். சம்பவத்தன்று இரவு எனது மகள் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு யாரும் இல்லாத நேரத்தில் அந்த இளைஞர் வீட்டிற்கு வந்து மிரட்டியுள்ளார். இந்து பெண்னாகிய நீ இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் அப்போது தான் உண்னை திருமணம் செய்து கொள்வேன் என்று. இதனை அருகில் உள்ள அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.

இதனை குனியமுத்தூர் காவல்துறையினரிடம் சொன்னால் அவர்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. எனது மகள் எழுதி வைத்த கடிதத்தை பார்க்க வேண்டும் என கேட்டாலும் காவல் நிலையத்தில் தரமாட்டிகிறார்கள். இந்த வழக்கை சிபிஐ அல்லது சிபி சி ஐ டி போலீசார் விசாரிக்க வேண்டும். லவ் ஜிகாத் என்கிற பெயரில் எனது மகளின் வாழ்க்கை நாசமாக போய்விட்டது. இது போன்று பல பெண்களின் வாழ்க்கை நாசமாக போய்கொண்டு இருக்கிறது .

மேலும் படிக்க