• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உத்தரபிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற கோவையை சேர்ந்த 4 பேர் வெயிலின் தாக்கத்தினால் பலி

June 11, 2019 தண்டோரா குழு

கோவையில் இருந்து வட இந்தியாவுக்கு சுற்றுலா சென்றவர்களில் 4 பேர் அனல்காற்றின் வேகம் தாங்காமல் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது

இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஆண்டு வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக, வடமாநிலங்களில் வெயிலின் தாக்கத்தினால் பலர் பலியாகியுள்ளனர். இதில், ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, சண்டீகர் போன்ற மாநிலங்களில் வெயிலின் தாக்கம் ஆனது அதிகமாகவே இருந்தது. இந்த வெயிலின் தாக்கத்தினால் வெப்பக்காற்று நாளும் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர். இந்த கடுமையான வெப்பத்தினால் குறிப்பிட்ட சில மாநில மக்களின் அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு கோவையில் இருந்து சுற்றுலா சென்ற 4 பேர், தமிழகம் திரும்பிய போது வெயிலின் தாக்கத்தினால் பலியாகினர். பச்சையா (80), பாலகிருஷ்ணன் (67), தனலட்சுமி (74) சுப்பர் ஐயா (71) ஆகிய 4 பேரும், கேரளா எக்ஸ்பிரஸில் வாரணாசி, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விட்டு, தமிழகம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். நேற்று மாலை ஜான்சி என்ற பகுதியில் ரயில் வந்து கொண்டிருந்த போது, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் கோவை மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க