• Download mobile app
16 Oct 2026, FridayEdition - 3901
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகக்கோப்பை தொடரிலிருந்து தவான் விலகல்…!

June 11, 2019 தண்டோரா குழு

காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து ஷிகார் தவான் விலகியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கடந்த மே 30ம் தேதி துவங்கியது. இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியையும், இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியையும் வீழ்த்தியது. ஆஸ்திரேலிய அணியுடன் சதமடித்து அசத்திய தவான் இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தார். இப்போட்டியில் தவான் 117 ரன்கள் எடுத்து இருந்தார்.இந்த போட்டியில் பேட்டிங் செய்த போது தவானுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர் ஃபீல்டிங் செய்வதிலிருந்து விலகி டிரெஸ்ஸிங் அறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.

இதற்கிடையில், இவரை பரிசோதித்த இந்திய அணி ஃபிஸியோக்கள் தவான் கட்டாயமாக 3 வாரங்களுக்கு விளையாடக்கூடாது என அறிவுறுத்தினர். இந்நிலையில், 3 வார கட்டாய ஓய்வு காரணமாக தவான் இந்திய உலகக்கோப்பை அணியிலிருந்து விலகியுள்ளார். தவானுக்கு பதிலாக ரிஷப் பண்ட் அல்லது ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவான் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க